About Us
பர்வதராஜ மீனவர் பொது அறக்கட்டளை:
1998- ஆம் ஆண்டு பருவதராஜகுல மீனவர் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பருவதராஜ மீனவர் பொது அறக்கட்டளை திருவண்ணாமலையில் பருவதராஜகுல சமுதாய முன்னோடிகள் ரூபாய் ஒரு லட்சம் வீதம் வழங்கி ரு.10 லட்சம் நிதி ஆதாரத்துடன், மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெனிபர் சந்திரன், வீட்டு வசதித்துறை அமைச்சர் மாண்புமிகு கு.பிச்சாண்டி ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன் நிறுவனராக கல்வியாளர் திரு.இ.சாமிக்கண்ணு அவர்களும். மற்ற மூத்த முன்னோடிகளும் நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர்.
- அறக்கட்டளை வாயிலாக 31.03.2001-ல் சென்னை கலைவாணர் அரங்கில், மீனவர் முரசு (மீனவர் குரல்) மாதயிதழ் சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய மு.க.ஸ்டான் அவர்கள் வெளியிட, அதை அமைச்சர் டாக்டர்.க.பொன்முடி, மாண்புமிகு அமைச்சர் ஜெனிபர் சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதழின் ஆசிரியராக கடலூர் டாக்டர் நடராஜன் அவர்கள் பொறுப்பு வகித்தார்.
- 31.08.1998-ல் தமிழ் நாடு அரசு மீனர் கூட்டுறவு இணையத்தின் மாநில் தலைவராக வாணியம்பாடி. வி.ஸ்ரீதர் அவர்களை வெற்றிபெறச் செய்தது.
- மீனவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 3% சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ் நாடு முழுவது பேரணி நடத்தி முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கியது
- சம்பை விற்பனை வரி விலக்குப் பெற்றுத் தந்தது.
- உள்நாட்டு மீனவர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மகளிர் கூட்டுறவுச் சங்கங்கள் நூற்றுக்கும் மேலாக உருவாக்கிக் கொடுத்து, மீன்வளத்துறை அமைச்சர், அரசுச் செயலாளர், இயக்குநர் ஆகியோரை அழைத்து உள்நாட்டு மீனவர்களுக்காக கருத்தரங்கம் நடத்தியது.
- இலவச வேட்டி சேலைகள் வழங்கியும், சுனாமி, வர்தா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் சமயத்தில் சமுதாய மக்களுக்கு உதவியும், அரசிடம் இருந்து உதவிகள் பெற்றுத் தந்துள்ளது.
- சமுதாய மாணவ மாணவியர்களுக்கு தமிழ் நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டு கல்வி ஊக்கத் தொகையாக பல இலட்சங்கள் வழங்கியுள்ளது.
- சமுதாய மக்களை ஒன்றிணைத்து, முதன் முதலாக மணமக்கள் அறிமுக விழாவினை சிறப்பாக 14.07.2002 அன்று சேலத்தில் அறிமுகம் செய்து, அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் வெகு சிறப்பாக விழா எடுத்து ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற வழிவகை செய்து வருகிறது.
- 525 -க்கும் மேற்பட்ட சமுதாய தொண்டள்ளம் கொண்டவர்களின் உதவியால் தலா ரூபாய் பத்தாயிரம் உறுப்பினர் கட்டணமாக பெற்று 52,50,000 தேசிய வங்கியில் வைப்பு நிதியாக வைத்து அதன் வட்டி பணத்தில் பல்வேறு நலதிட்டங்கள் செய்து வருகிறது. இதனுடன் மீனவர் குரல் பத்திரிகை கட்டணம் பலவகையான கட்டண பெற்றதின் வாயிலாக இன்றுவரை சுமார் எழுபது லட்சம் நிதியாக வங்கியில் வைத்து கம்பீராக செயலாற்றி வருகிறது.
தமிழ் மாநிலப் பருதராஜகுல மீனவர் சங்கம்:
சென்னை மாகாண உள்நாட்டு பருவதராஜகுல மீனவர் சங்கம்/தமிழ் நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம் எஸ்-1,31-32, பதிவு காலாவதியான காரணத்தினால், சேலம் ஆர்.கே. ஓட்டல் நடந்த பொதுக்குழுவின் தீர்மானத்தின்படி 17.11.1997 அன்று சென்னையில் தமிழ் மாநிலப் பருவதராஜகுல மீனவர் சங்கம் ( 391/97) என்று பதிவு செய்யப்பட்டது. இதன் நிறுவனராக எடப்பாடி திரு. எஸ்.எம்.வி.தங்கவேல் பக்தர் அவர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொறுப்பு வகித்தனர்.
08.03.1998 அன்று விழுப்புரத்தில் தமிழ் மாநிலப் பருவதராஜகுல மீனவர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. அதில் தலைவராக திரு.இ.எஸ்.சாமிக்கண்ணு, செயலாளராக கடலூர் டாக்டர் நடராஜன், பொருளாளராக திரு.ஜி.ஆர்.அப்பாராஜ் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்க உறுப்பினர்கள் கட்டணம் சுமார் ஏழு இலட்சம் விழுப்புரம் வங்கியில் வைப்பு நிதியாக வைத்து பராமரிக்கப்பட்டு வருவதுடன், தற்போது வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படி தேர்தலும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சங்கம் மற்றும் அறக்கட்டளையின் வரவு செலவுகள் தணிக்கை செய்யப்பட்டு அரசு பதிவாளரிடம் சமர்ப்பித்து பதிவை புதிப்பித்து வருகின்றனர்.
தற்போதைய அறக்கட்டளையின் தலைவரா திருவள்ளூர் திரு. வி.ராகவன் அவர்களும், சங்கத்தின் தலைவராக தர்மபுரி வீ.சரவணன் அவர்களும், மீனவர் குரல் ஆசிரியராக சென்னை ராயபுரம் புலவர் பா.வீரமணி அவர்களும் செவ்வனே பணியாற்றி வருகின்றனர்.